Categories
தேசிய செய்திகள்

ஆக்சிஜன் பற்றாக்குறை… ஒரே மருத்துவமனையில் 8 பேர் உயிரிழப்பு… அதிர்ச்சி சம்பவம்..!!

டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மருத்துவர் உட்பட 8 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருவதால் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பல மாநிலங்களில் தடுப்பூசி மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.

டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழக்கும் அவலம் நீடிக்கிறது. இந்நிலையில் டெல்லி பத்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் இல்லாததால் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் அந்த மருத்துவமனையிலேயே மருத்துவராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |