Categories
தேசிய செய்திகள்

“ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார்”… மத்திய அரசு அறிவிப்பு..!!

ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார் என்று மத்திய அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்

நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது ஒருபுறமிருக்க ஆக்சிஜன் தேவையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருப்பதால், ஆக்சிஜன் உற்பத்திக்காக எந்த முயற்சியும் எடுக்க தயார் என்று மத்திய அரசின் வழக்கறிஞர் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளார். மேலும் ஸ்டெர்லைட் ஆலை திறப்பதற்கான வழக்கு நாளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை நடக்கும் விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி தரப்படுமா? அதற்கு தமிழக அரசின் பதில் என்னவாக இருக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி வேண்டி வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலையில் தயாரித்த ஆக்ஸிஜனை இலவசமாக வழங்க அனுமதிக்க வேண்டும். மேலும் அந்த ஆக்சிசன் உற்பத்தி கூடத்தில் நாளொன்றுக்கு 500 டன் ஆக்ஸிஜன் தயாரிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |