வளிமண்டலத்தில் உள்ள ஹைட்ரஜன் மற்றும் கீழே அதற்கு அடுத்து அதிகமாக இருப்பது ஆக்சிஜன் ஆகும் பூமியின் வளிமண்டலத்தில் 20.95% ஆக்சிஜன் உள்ளது. இது பூமியின் மேலோட்டத்தில் பாதி ஆக்சைடு வடிவில் அமைந்துள்ளது. பூமியில் உள்ள மரம் செடி கொடிகள் நமக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்து தருகிறது. மரங்கள் எவ்வாறு ஆக்சிஜனை உருவாக்குகிறது என்பதை பின்வருமாறு காண்போம். மரத்தில் இருக்கும் செல்களில் குளோரோபிளாஸ்ட் அங்கும் இங்கும் ஓடி கொண்டிருக்கிறது. சூரிய ஒளி எந்த பக்கம் இருக்கிறதோ அதனை நோக்கி குளோரோபிளாஸ்ட் செல்லும். இது சூரிய ஒளி மற்றும் கார்பன்-டை-ஆக்சைடு ஆகியவற்றை பயன்படுத்தி போட்டோசிந்தசிஸ் மூலமாக எனர்ஜியை உற்பத்தி செய்கிறது. அப்போது தாவரங்களால் வெளியிடப்படுவது தான் ஆக்சிஜன். தண்ணீருக்கு அடியில் ஆக்சிஜன் வெளியாவதை நம்மால் தெளிவாக காண முடியும். ஏனென்றால் தண்ணீருக்கு அடியில் தாவரங்கள் ஆக்சிஜனை வெளியிடும் போது சிறிய நீர்க்குமிழ் உருவாகிறது.
Categories
ஆக்சிஜன் இப்படிதான் உருவாகிறதா….? மரங்களின் முக்கிய பங்கு…. வெளியான சில தகவல்கள்…!!
