ஆக்சன் கிங் அர்ஜுனின் தந்தை 200 படங்களுக்கு மேல் நடித்த நடிகர் என்ற செய்தி அவர் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் ஆக்சன் கிங் அர்ஜுன். வயது அதிகரித்தாலும் ஆக்சன் காட்சிகளில் அர்ஜுன் இன்றும் கலக்கி வருகின்றார். அப்பேர்ப்பட்ட அர்ஜூனின் தந்தையும் ஒரு நடிகர் என்பது பலரும் அறியாத ஒரு விஷயம். அர்ஜுனின் தந்தையான கே ஜி. இராமசாமி என்கிற சக்தி பிரசாத் கன்னட திரையுலகில் தலைசிறந்த நடிகர் ஆவார். ஆக்சன் கிங் அர்ஜுனை பொருத்தவரை நடிகர் மட்டுமல்லாது சிறந்த இயக்குநரும் கூட. அதுவும் அவரது படங்களில் தாய் நாட்டுப்பற்று அளவுக்கு அதிகமாகவே இருக்கும். கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கும் அர்ஜுன் 90களில் மிகவும் பிஸியாகவே இருந்து வந்தார்.
இப்போது சென்னையில் ஒரு நாள் இரண்டாம் பாகம் படத்தை இயக்கிய ஜான்பால்ராஜ் இயக்கும் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் பிக்பாஸ் புகழ் லாஸ்யா கதாநாயகியாகவும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர். சமீபத்தில் அர்ஜுனின் மருமகன் உயிரிழந்த செய்தி அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் அர்ஜுன் தந்தை பற்றிய செய்தி அவர் ரசிகர்களை பிரமிப்படைய செய்துள்ளது.