கர்ப்பிணி பெண்ணாக யசோதா திரைப்படத்தில் சமந்தா நடித்ததற்கு வாங்கிய சம்பளம் குறித்த செய்தி வெளியாகியிருக்கின்றது.
தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் நாக சைதன்யாவை பிரிந்த பிறகு தனது கெரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இவர் தற்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் அடுத்ததாக யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.
இத்திரைப்படம் ஆக்சன் கதை களத்தில் உருவாகி இருக்கின்றது. கர்ப்பிணி பெண்ணாக சமந்தா நடித்திருக்கும் இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சமந்தா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. சமந்தா இந்த படத்தில் நடித்ததற்காக 2.5 கோடி சம்பளமாக வாங்கி இருக்கின்றார் என செய்தி வெளியாகிருக்கின்றது.