Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

ஆகஸ்ட் 31வரை இவற்றுக்கெல்லாம் தடை – அதிரடி அறிவிப்பு …!!

தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொது முடக்கம் தொடரும் என தமிழக முதல்வர் தெரிவித்தார். மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு தமிழக அரசு சார்பாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக நேற்று மாவட்ட ஆட்சியரிடம் தமிழக முதல்வர் ஆலோசனை நடத்தி கருத்துக்களை கேட்டறிந்தார். இந்த நிலையில்தான் தமிழக அரசு சார்பாக ஆகஸ்ட் 31 வரை எவற்றிற்கெல்லாம் தடை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பதற்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான பொது, தனியார், பேருந்து, ரயில், போக்குவரத்தும், சர்வதேச விமான போக்குவரத்து தடை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தியேட்டர்கள், மால்கள், ஜிம்கள், வணிக வளாகங்களுக்கான தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |