Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில்….. அரசு அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் வணிகர்கள்….!!!!

அரசு பேருந்துகளில் திருநெல்வேலி அல்வா, நாகர்கோவிலில் நேந்திரம் பழம் சிப்ஸ் போன்ற பொருள்கள் வெளியூர்களுக்கு அனுப்பும் திட்டம் வரும் மூன்றாம் தேதி முதல் அமலுக்கு வருகின்றது.

தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் குறுகிய நேரத்தில் அரசு விரைவு பேருந்துகளை போக்குவரத்துக் கழகம் இயக்கி வருகிறது. தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிகளில் விளைவிக்கப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் பிரபலமான பொருட்களை பிற பகுதிகளில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்போது லாரி மற்றும் பார்சல் சேவைகள் எடுத்துச் செல்கின்றது. குறைந்த அளவிலான பொருட்களை லாரி வாடகைக்கு இணையாக குறைந்த நேரத்தில் விரைவில் அனுப்புவதற்கு ஏதுவாக விவசாயிகள், வணிகர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் நாள்தோறும் அனுப்ப வேண்டிய பொருள்களை இரண்டு ஊர்களுக்கு இடையே அனுப்பும் வகையில் பேருந்துகளில் பார்சல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு மாதம் முழுவதும் பஸ்களில் உள்ள சரக்கு வைக்கப்படும் பெட்டிகளை மாத வாடகை அல்லது தினசரி வாடகை செலுத்தி நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலமாக திருநெல்வேலி அல்வா, ஊத்துக்குளி வெண்ணெய், தூத்துக்குடி மக்குரோன், கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் சிறு வாழை, நாகர்கோவில் நேந்திரம் பழம் சிப்ஸ் உள்ளிட்ட அனைத்து பொருட்களும், தமிழகம் முழுவதும் உள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்க முடியும். சிறு, பெரு வியாபாரிகள் வணிகர்கள் இந்த சேவையை பயன்படுத்துவதற்கு அருகில் உள்ள போக்குவரத்து கழக கிளை மேலாளரிடம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இது தொடர்பான கட்டண விவரமும் அங்கு கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |