இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே, பசில் ராஜபட்சே ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற விதிக்கப்பட்ட தடை ஆகஸ்ட் 2 வரை நீடிப்பு.
இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி சூழலுக்கு இடையே அங்கு அரசியல் குழப்பங்களும் இருந்து வருகின்றன. தற்போது இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன தேர்வாகியுள்ளார்.
இந்நிலையில் இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபட்சே, முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபட்சே ஆகிய இருவரும் இலங்கையை விட்டு வெளியேற இலங்கை சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்திருந்தது. மேலும் இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணையில் தடையை ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.