Categories
ஆன்மிகம்

ஆகஸ்ட் 16 ஆம் தேதி சபரிமலை நடைதிறப்பு…. தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி…..!!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக ஆகஸ்ட் 16 ஆம் தேதி மாலை சபரிமலை நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் தினமும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். அன்று மாலை 5 மணிக்கு மேல் சாந்தி சுதீர் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவர். அதன் பிறகு இரவு 8 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆகஸ்ட் 17ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு நடை திறந்து வழக்கமான பூஜைகள் தொடங்கும். ஆகஸ்ட் 19ஆம் தேதி காலை முதல் ஓண பூஜைகள் நடைபெறும். ஆகஸ்ட் 23-ஆம் தேதி முழுவதும் நடை திறந்திருக்கும்.

அது மட்டுமல்லாமல் எல்லா நாட்களிலும் கணபதி ஹோமம், நெய்யபிஷேகம், உஷ பூஜை, களபாபிஷேகம், உச்ச பூஜை, தீபாராதனை, படி பூஜை மற்றும் அத்தாழ பூஜை ஆகியவை நடைபெறும். இவற்றுடன் உதயாஸ்தமன பூஜையும் நடைபெறும். ஆகஸ்ட் 21-ஆம் தேதி திருவோண சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்பிறகு ஆகஸ்ட் 23-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.

கடந்த மாதம் சிறப்பு பூஜையின் போது தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது திருவோண ஆவணி பூஜையில் தினமும் 15 ஆயிரம் பக்தர்கள் வீதம் ஆன்லைன் முன்பதிவு மூலம் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இரண்டு தடுப்பூசி அல்லது 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் கொண்டுவர வேண்டுமென தெரிவித்துள்ளது.

Categories

Tech |