ஆகஸ்ட் 15ஆம் தேதி கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலக அளவில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்கு உலக நாடுகள் ஒருபுறம் ஊரடங்கை கையாண்டு வரும் சூழ்நிலையில், மற்றொருபுறம் தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கான வேலைகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும், மனிதர்களிடம் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.
இந்நிலையில் கொரோனாவுக்கான தடுப்பூசி மருந்தை ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்த ஐ சி எம் ஆர் திட்டமிட்டுள்ளதாகவும், பாதிப்பு அதிகரித்து வரும் இந்த சமயத்தில் அதனுடைய தோற்றம் மற்றும் அறிகுறிகள் மாற்றமடையலாம். எனவே ஆகஸ்ட் 15க்குள் தடுப்பு மருந்தை அறிமுகப்படுத்த அவசரம் காட்ட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1947 ஆம் ஆண்டுக்கு முன்வரை வெள்ளைக்காரர்கள் பிடியில் சிக்கியிருந்த இந்தியர்களுக்கு, ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் சுதந்திரம் கிடைத்தது. அதேபோல் ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ள இந்த தடுப்பூசியால் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்தும், ஊரடங்கில் இருந்தும் விடுதலை பெற்று சுதந்திரம் அடைவோமா? என்பது இந்தியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.