கொரோனா ஊரடங்கில் நாடு முழுவதும் 3ஆம் கட்ட தளர்வுகளை அறிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் அமலுக்கு வரும். கொரோனா பாதிப்பு சூழலை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் முடிவு எடுத்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் யோகா மையங்கள், உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி. விளையாட்டு அரங்குகளில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும். வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம்.
சுதந்திர தின கொண்டாட்டங்களில் மாஸ்க் அணிந்து, தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் இரவு நேரதில் நடமாடுவதற்கு இருந்த தடை விளக்கி கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவைக்கு தடை நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களை அழைத்து வரும் பணி தொடரும்.என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.