தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய பிரியாணி கடை பிறப்பை முன்னிட்டு வாடிக்கையாளரைக் கவரும் வகையில் இரண்டு பிரியாணி பார்சலுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் டோக்கன் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் மூன்றாம் ரயில்வே கேட் மேம்பாலம் அருகே புதிய பிரியாணி கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.
அதில் வாடிக்கையாளரைக் கவரும் வகையில் அசத்தல் திட்டத்தை செயல்படுத்தும் விதமாக இரண்டு பிரியாணி பார்சல் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசம் என்று தூத்துக்குடி நகரம் முழுவதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தகவல் காட்டுத் தீயாய் பரவ, இரண்டு பார்சல் பிரியாணியுடன் ஒரு லிட்டர் பெட்ரோலை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.