Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க கட்சி அலுவலகம் யாருக்கு….? இ.பி.எஸ், ஓ.பி.எஸ் தரப்பில் மனு தாக்கல்…. வழக்கு விசாரணை எப்போது….?

உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பிஎ.ஸ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை அகற்ற வலியுறுத்தி எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும் தனித்தனியே மனு கொடுத்துள்ளனர். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி அ.தி.முக. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறையை கண்டித்து வருவாய்த்துறை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சீல் வைத்துள்ளார். இதை உடனடியாக ரத்து செய்து, கட்சி அலுவலகத்தை ஒப்படைக்க வேண்டும். அதன் பிறகு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் போது கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறி ஏற்கனவே ஜெயக்குமார் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனையடுத்து பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் முடிவடைவதற்கு முன்பாகவே ஓ.பிஎ.ஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அதோடு அலுவலகத்தில் இருந்த முக்கியமான கோப்புகளை எடுத்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாக செயல்படும் காவலர்கள் 14 பேரை கைது செய்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து சொத்து தொடர்பான பிரச்சனை இருந்தால் மட்டுமே சீல் வைக்க வேண்டும் எனவும், அ.தி.மு.க கட்சி அலுவலகத்தை பொருத்தவரை சொத்து பிரச்சனை எதுவும் நடைபெறவில்லை எனவும், இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் கட்சி அலுவலகத்தின் மீது எனக்கு உரிமை உண்டு எனவும், பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேப்போன்று ஓ. பன்னீர்செல்வமும் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் எடப்பாடி பழனிச்சாமி தன்னை இடைக்கால பொதுச்செயலாளராக அறிவித்துக் கொண்டது நீதிமன்ற விதிமுறைகளை மீறியது. அதன் பிறகு என்னை ஒருங்கிணைப்பாளர் என்றோ எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் என்றோ நீதிமன்றம் அறிவிக்கவில்லை. கட்சியால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் எனக்கு கட்சி அலுவலகத்திற்குள் செல்வதற்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது.

இதனையடுத்து கட்சி அலுவலகத்தால் பொது அமைதிக்கு இடையூறு ஏற்பட்டது தொடர்பாக எந்தவித ஆதாரங்களும் இல்லாததால் வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இ.பி.எஸ் தரப்பில் கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பான வழக்கை அவசர வழக்காக ஏற்று நீதிமன்றம் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் நீதிபதி வழக்கு முறையாக பட்டியலிடப்பட்டுதான் விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |