Categories
மாநில செய்திகள்

அ.தி.மு.க கட்சி அலுவலகத்திற்கு சீல்…. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு…. நீதிமன்றம் அதிரடி….!!!

அ.தி.மு.க கட்சி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது தொடர்பாக முழு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அ.தி.மு.க கட்சியில் ஒற்றை தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கடந்த 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த பொதுக்குழு கூட்டத்தின் போது ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அ.தி.மு.க கட்சி அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த முக்கியமான கோப்புகளை எடுத்துச் சென்றனர். இதன் காரணமாக ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தரப்புகளுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக வருவாய் கோட்டாட்சியர் பாதுகாப்பு கருதி கட்சி அலுவலகத்திற்கு சீல் வைத்தார். இந்த சீலை அகற்ற வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பிஎ.ஸ் தரப்பில் தனித்தனியாக மனு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இ.பி.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கட்சியின் சொத்து தொடர்பாக எந்த பிரச்சனையும் வரவில்லை எனவும், கட்சி அலுவலகம் தற்போது வரை அ.தி.மு.க வசம் தான் இருக்கிறது எனவும், கட்சியின் தலைமை கழக செயலாளர் என்ற அடிப்படையில் கட்சி அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் பொறுப்பாளர் எனவும், அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது சட்டப்படி தவறானது என்றும், காவல்துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது தான் வன்முறைக்கு காரணம் எனவும் வாதிட்டார்.

அதன்பிறகு ஓ.பி.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கட்சி அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என எந்த ஒரு உத்தரவும் வெளியிடப்படவில்லை எனவும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பி.எஸ்-க்கு கட்சி அலுவலகத்திற்கு செல்வதற்கு எல்லா அதிகாரமும் இருக்கிறது எனவும், அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது தவறானது எனவும் வாதிட்டார். இதைத்தொடர்ந்து காவல்துறை தரப்பில் இருந்து அ.தி.மு.க புகார் கொடுத்ததன் காரணமாக ஏராளமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் எனவும், காவலர்களின் எதிர்ப்பை மீறி ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தனர்.

அவர்களை நாங்கள் தடுப்பதற்கு முயற்சி செய்ததால் தான் கலவரத்தில் உயிரிழப்புகள் ஏதும் என் நடைபெறவில்லை எனவும், அ.தி.மு.க ஆட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வன்முறைக்கு இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் தான் காரணம் எனவும், காவல்துறையினர் பொறுப்பாக மாட்டார்கள் எனவும் கூறப்பட்டது. இந்த வாதங்கள் அனைத்தையும் கேட்ட நீதிபதி அ.தி.மு.க கட்சி அலுவலகத்தில் நடந்த வன்முறை பற்றி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். மேலும் வழக்கு விசாரணையை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Categories

Tech |