சிவகங்கையில் புதிய நிர்வாகிகள் அ.தி.மு.க மற்றும் அதன் சார்பு அணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் புதிய நிர்வாகிகள் அதிமுக மற்றும் அதன் சார்பு அனைத்து நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் சிவகங்கை நகர் கழக செயலாளராக என்.எம்.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர்களாக அர்ஜுனன் மற்றும் ஓய்வுபெற்ற சார்பதிவாளர் ஆர்.எம்.இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக வி.ஜி.பி. கருணாகரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளராக மஞ்சுளா பாலச்சந்தர் என்பவரும், மாவட்டக் கலைப்பிரிவு செயலாளராக செந்தில் முருகன் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களை துணை முதலமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சரும் ஒருங்கிணைப்பாளருமான பழனிச்சாமியும், மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் மற்றும் கதர் கிராம தொழில் துறை அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் பரிந்துரையின் படி அறிவித்துள்ளனர்.