அ.தி.மு.க கட்சியின் பிரச்சினை குறித்து மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அ.தி.மு.க கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனை தொடர்ந்து 6-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓ. பன்னீர் செல்வத்துடன் முன்னாள் அமைச்சர்கள் தம்பிதுரை, நடராஜன், வெல்ல மண்டி வைத்திலிங்கம் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேப்போன்று எடப்பாடி பழனிச்சாமியுடன் முன்னாள் அமைச்சர்கள் அக்ரி சுந்தரமூர்த்தி, பொள்ளாச்சி ஜெயராமன், தளவாய்சுந்தரம், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேனி மாவட்ட பொறுப்பாளர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் தம்பிதுரை, பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.