அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் பெய்து கொண்டிருக்கும் வரலாறு காணாத தொடர் கனமழை காரணத்தால் பிரம்மபுத்திரா மற்றும் அதனுடைய கிளையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருகின்றது. அதனால் அம்மாநிலத்தின் 26 மாவட்டங்களில் இருக்கின்ற 28 லட்சம் மக்கள் பாதிப்படைத்துள்ளனர். தற்போது வரை ஆயிரத்து 536 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கி பெரும் பாதிப்பை சந்தித்திருக்கின்றது. இந்நிலையில், அஸ்ஸாம் வெள்ளப் பாதிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கையானது 107ஆக அதிகரித்துள்ளது.
இது பற்றி அம்மாநில பேரிடர் மீட்பு மேலாண்மை துறை அலுவலர்கள் கூறும்போது, ”பிரம்மபுத்திரா ஆற்றில் நீரின் அளவு அபாயக் கட்டத்தில் நீடித்து வருகிறது. மேலும் பருவமழையும் பல்வேறு பகுதிகளில் தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. இதனால் வெள்ளப் பாதிப்பு பணிகளை சரி செய்வதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.காசிரங்கா தேசிய பூங்காவிலிருந்து 165 விலங்குகள் மீட்கப்பட்டு இருக்கின்றன. இருந்தாலும் வெள்ளத்தால் 142 விலங்குகள் பலியாகியுள்ளன. பூங்காவின் 65 விழுக்காடு நிலம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் இருக்கின்றது”என்று கூறியுள்ளார்.