Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அவிநாசியில் 100 இளைஞர்களின் பெருஞ்சலங்கையாட்ட அரங்கேற்றம்”….. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ…!!!!!!

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நூறு இளைஞர்களின் பெருஞ்சலங்கையாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது.

அவிநாசியில் இருக்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பெருஞ்சலங்கை ஆட்டக்குழு, கொங்கு பண்பாட்டு மையத்தின் சார்பாக உள்ளி விளவு என்ற கொங்கு பெருஞ்சலங்கையாட்டம் நடைபெற்றது. இதில் 100 இளைஞர்கள் முறையாக பயிற்சி பெற்று சத்திய பிரமாணம் எடுத்து நாட்டார் ஆதி சிவனை நெருப்பாக வழிபாடு செய்து அரங்கேற்றம் செய்தார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு கொங்கு மக்கள் தேசிய கட்சி வடக்கு மாவட்ட செயலாளர் சுகுமார் தலைமை தாங்க மாவட்ட கவுன்சிலர் கரைப்புதூர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ, சிரவை அதீனம் கவுமார மடாலயம் குமரகுருபர சுவாமிகள், கொங்கு பண்பாட்டு மைய தலைவரும் கட்சியின் கலை இலக்கிய அணி துணைச் செயலாளருமான ஆதன் பொன் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கினார்கள்.

Categories

Tech |