Categories
சினிமா

“அவர் திரும்ப வந்து விட்டார்”…. இந்தியன்-2 படத்தின் போஸ்டர் வெளியீடு…. வைரல்….!!!!

கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன்-2 திரைப்படம் இயக்கப்போவதாக சங்கர் அறிவித்து, பிறகு படப்பிடிப்பு பணிகளும் துவங்கியது. இதையடுத்து பல காரணங்களால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு சங்கரும், கமல்ஹாசனும் வெவ்வேறு திரைப்படங்களில் தங்களின் கவனத்தை செலுத்தினர். இதற்கிடையில் விக்ரம் பட வெற்றிக்குப் பின் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல்ஹாசன், இந்தியன்-2 கண்டிப்பாக தொடங்கும் என தெரிவித்து இருந்தார்.

இப்படத்துக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்ட காஜல் அகர்வால் விலகிவிட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதை காஜல் அகர்வால் மறுத்து, படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்க இருக்கிறது என்று தெரிவித்தார். இந்த நிலையில் இந்தியன்-2 திரைப்படத்தின் புது போஸ்டர் ஒன்றை படக் குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் “அவர் திரும்ப வந்து விட்டார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இப்போஸ்டரை பகிர்ந்துள்ள நடிகர் கமல்ஹாசன் செப்டம்பர் மாதம் முதல் “இந்தியன்-2” படப்பிடிப்பு துவங்கும் என குறிப்பிட்டுள்ளார். இந்த போஸ்டர் இப்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

Categories

Tech |