Categories
சினிமா

“அவர் தன் தனிப்பட்ட உழைப்பினால் முன்னேறிய ஒருத்தர்”…. இயக்குனர் பார்த்திபன் பேச்சு….!!!!

நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி, ஹரிதாஸ், வாகா படங்களை இயக்கிய ஜி.என்.ஆர்.குமார வேலன் இயக்கி இருக்கும் “சினம்” திரைப்படத்தில் அருண்விஜய் நடித்திருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக பாலக்லால்வாணி நடித்திருக்கிறார். இப்படத்தின் பின்னணி இசையை ஷமீர் இசை அமைத்துள்ளார். ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாகி உள்ள இப்படத்தில் அருண் விஜய் சப் இன்ஸ்பெக்டராக பாரி வெங்கட் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சினம் படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. இவ்விழாவில் திரைத் துறையினர், படக்குழு என பலரும் பங்கேற்றனர். இவற்றில் நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருப்பதாவது “நடிகர் அருண்விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஒரு சிறந்த நடிகரின் நடிப்பை நேரில்பார்த்த மகிழ்ச்சி எனக்கு கிடைத்தது. அவர் மேலும் அதிக உயரத்திற்கு செல்ல வேண்டும். அவருக்கு பல திறமைகள் உள்ளது.

அவருடைய பாடும் திறமையை பாராட்டியாக வேண்டும். இயக்குனர் குமார வேலன் திறமையான இயக்குனர் ஆவார். அவருடன் 3 படங்கள் பணிபுரிந்துளேன். அத்துடன்  அவர் சிறந்த ஒளிப்பதிவாளரும் கூட. அவர் இப்படத்தில் சிறந்த பணியை கொடுத்து இருக்கிறார். இந்த திரைப்படம் செப்டம்பர் 16ம் தேதி வெளியாகயிருக்கிறது” என்று கூறினார். பின் இயக்குனர் பார்த்திபன் கூறியதாவது, “அருண் விஜய் வெற்றியை சந்திக்க பலகாலம் ஆகியது. அவர் தன் தனிப்பட்ட உழைப்பினால் மட்டுமே முன்னேறிய ஒருத்தர் ஆவார். இசையமைப்பாளர் சபீருடைய பாடலானது மயக்கும் வகையில் உள்ளது. தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் என் வாழ்த்துகள்” என்று கூறினார்.

Categories

Tech |