Categories
உலக செய்திகள்

அவர் கொலையாளி என நம்புகிறேன்…. ஜோ பைடனின் சர்ச்சைக்குரிய கருத்து…. வாழ்த்துக் கூறிய ரஷ்ய அதிபர்….!!

ரஷ்ய அதிபர் கொலையாளி என்று ஜோ பைடன் கருத்து தெரிவித்துள்ளதால் இருநாட்டு நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபரான ஜோ பைடன் ரஷ்ய ஜனாதிபதி பற்றி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அவர்  ஏபிசி செய்தி நேரடி ஒளிபரப்பு கானலின் போது கேட்ட கேள்வியில் ரஷ்ய அதிபர் புடின்  கொலையாளியா? என்ற கேள்விக்கு ஆமாம் நான் அதை நம்புகிறேன் என்று கூறினார். ரஷ்யா 2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தலையிட்டதாகவும் அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுப்பதாகவும் கூறியுள்ளார். ஜோ பைடனின் இந்த கருத்து இருநாட்டு நட்பில் விரிசல் ஏற்பட காரணமாக அமைந்தது.

ஜோ பைடனின் கருத்தை கேட்ட துருக்கி அதிபர் தயிப் எர்டோகன் கண்டனம் தெரிவித்தார்.மேலும் அதிபர் ஜோ பைடனின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது, இது ஒரு அதிபர் கூறும் கருத்துக்கு தகுதியற்றது என்றும் துருக்கி அதிபர் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் கருத்து தொடர்பில்  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடல் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளுடனும் நலமாக வாழ வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புடின் வாழ்த்தினார்.

Categories

Tech |