தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு காரணமாக பல உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதை தடுக்க தமிழக சட்டமன்றத்தில் அவசரகால மசோதா கொண்டுவரப்பட்டது. இதையடுத்து அனுமதிக்காக அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. எனினும் தமிழக ஆளுநர் மசோதாவிற்கு கையெழுத்து போடாமல் காலதாமதம் செய்துவந்தார்.
இதன் காரணமாக அவசரகால மசோதா செல்லுபடியாகாமல் போனது. இதுகுறித்து தமிழகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேட்கப்பட்டது.
அப்போது அவர் பேசியதாவது “ஆளுநருக்கு மசோதா வந்திருக்கும் நிலையில், அதில் உடனே கையெழுத்து போடவேண்டும் என்று கிடையாது. ஆளுநர் எனில் எவ்வித சந்தேகமும் இன்றி உடனடியாக மசோதாவில் கையெழுத்து போடவேண்டும் என்று நினைக்க கூடாது. ஆகவே இதனை காலதாமதம் என்று எடுத்துக்கொள்ள முடியாது” என்று அவர் பேசினார்.