Categories
அரசியல் மாநில செய்திகள்

அவர்கள் ஆண்டது போதும்…. இனி தமிழகத்தில் நம் ஆட்சி தான்…. கெத்து காட்டிய அன்புமணி…!!!

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது. இதில் பாமக தனித்துப் போட்டியிட உள்ளது. இந்நிலையில் பரப்புரையில் ஈடுபட்டு வரும் அன்புமணி ராமதாஸ், நகர்புற தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், 52 வருட காலம் இரண்டு  அதிமுக – திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்கிறது.

அவர்கள் ஆட்சி செய்தது போதும். இனி பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் ஆட்சி செய்ய வேண்டும். தற்போது நாம் ஆட்சி செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நோக்கமே வேறு யாரோ ஆட்சி செய்வதற்காக அல்ல. பாமக ஆட்சி செய்யவே அன்று ராமதாஸ் கட்சி தொடங்கினார். கடந்த 50 ஆண்டுகாலம் ஓட்டுக்கு 500 ரூபாய் 2 ஆயிரம் வாங்கி பணிந்து பணிந்து சென்றதால் இப்போது நாம் இந்த நிலைமையில் இருக்கிறோம் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |