Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அவர்களே போய்விட்டார்கள்…. நான் வாழ்ந்து எதற்கு…? விரக்தியில் விஷம் குடித்த மனைவி…!!!

கணவன் மற்றும் மகன் இறந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மனைவியும் விஷம் அருந்தி இறந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் பகுதியில் வசித்து வருபவர்கள் ஜெயபால்-லீலாவதி (வயது 45) தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜெயபால் இறந்துவிட்டார். இதனால் லீலாவதி தனது 2 மகன்களுடன் வசித்து வந்த நிலையில் இவரது மூத்த மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே கணவன் மற்றும் மகனின் இறந்த துக்கம் தாங்கமுடியாமல் லீலாவதி மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது.

மகன் மற்றும் கணவரின் பிரிவால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லீலாவதி, போன  மாதம் 19ஆம் தேதியன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் லீலாவதியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து சூலூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |