Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“அவரை விடுதலை பண்ணுங்க” உறவினர்களின் திடீர் போராட்டம்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆலத்தியூர் கிராமத்தில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சிவகுமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் சிவகுமார் அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துள்ளார்.

இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சிவகுமாரை கைது செய்ததோடு, அவரிடம் இருந்த 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் கைது செய்யப்பட்ட சிவக்குமாரை விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவரது உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனை அடுத்து போலீஸ் பாதுகாப்புடன் சிவகுமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories

Tech |