செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராயபுரம் தொகுதியை பொருத்தவரையில் எல்லாவிதமான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் எல்லாம் அம்மாவுடைய அரசில் முழுமையாக செய்யப்பட்டது, அதை பராமரித்து இருந்தாலே போதும், உதாரணத்துக்கு வந்து சீனிவாசபுரம், போஜராஜ நகர், கேனால் தெரு பிச்சாண்டி லைன், ஆறுதொட்டி, ஸ்லம்ப் பகேட்ஸ் அங்கெல்லாம் முழுமையான அளவிற்கு அந்த இடங்களில் தூர்வாரி முன்னெச்சரிக்கையாக நாங்கள் எல்லாமே கிளியரா வைத்திருந்தோம்.
அதோட விளைவு என்ன ஆச்சுன்னா பொதுவாகவே மழை நீர் போகும் இப்போ நீங்க சீனிவாசபுரம் போய் பாருங்க, கெனால் தெரு போய் பாருங்க, போஜராஜ நகர் போய் பாருங்க இடுப்பளவு தண்ணீர் இருக்கிறது. இந்த நிலைமை ஒரே தடவை தான் இருந்தது, அதுவும் அங்கு பார்த்துட்டு அன்றைக்கு மாண்புமிகு முதலமைச்சர் பராமரித்து எல்லாவித ஏற்படும் பண்ணிட்டு போன டிசம்பர் மாதம் ஒரு சொட்டு தண்ணீர் கூட நினைக்கல அப்படி பண்ணிருக்கோம்.
ஆனால் இன்றைக்கு எப்படிபட்ட நிலைமை. 5அடிக்கு தண்ணீர் இருக்கு, படகுகளில் போகக்கூடிய சவாரி நிலை தான் இருக்கிறது. ஒரு நாள் கூட இன்றைக்கு மக்களை போய் எட்டிப்பார்த்து எந்த நிவாரணமும் இந்த தொகுதியுடைய எம்.எல்.ஏ போய் பண்ணவில்லை. போற இடமெல்லாம் நீங்களே அவர்களை கூட்டிட்டு போங்க, போகின்ற இடத்திலெல்லாம் கண்டிப்பா அவரை விடவே மாட்டாங்க இன்றைக்கு. அந்த அளவுக்கு மக்களை எட்டிப்பார்க்காமல், மக்களுக்கு எதுவும் செய்யாத ஒரு சட்டமன்ற உறுப்பினர் இன்றைக்கு ராயபுரம் பெற்றிருப்பது மிகவும் வேதனைக்குரிய ஒரு துரதிர்ஷ்டம் தான் சொல்ல முடியும் என தெரிவித்தார்.