கள்ளகாதலுக்காக மனைவி கணவனை கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டு மன்னார் பகுதியில் குச்சிப்பாளையம் காலணி தெருவில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு அனிதா என்ற மனைவியும் அனு ஹாசினி மற்றும் நிரஞ்சன் என்ற குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நெய்வாசல் பகுதியில் அனிதா தனது குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பாக இளையராஜா தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை பார்ப்பதற்காக நெய்வாசல் பகுதிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அனிதாவின் வீட்டின் பின்புறத்தில் இளையராஜா சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து பந்தநல்லூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த தகவலின் படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளையராஜாவை கொலை செய்த மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது சந்தேகத்தின் பேரில் இளையராஜாவின் மனைவி அனிதாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக அனிதாவுக்கு ஜெயபால் என்பவருக்கும் கள்ளக்காதல் இருந்துள்ளது. இந்நிலையில் அனிதாவும் ஜெயபாலும் வீட்டில் தனியாக இருந்தபோது இளையராஜா அங்கு சென்றுள்ளார். இதை பார்த்த இளையராஜா அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் இளையராஜாவை அம்மிக்கல்லால் கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் அனிதாவை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஜெயபாலை வலைவீசி தேடி வருகின்றனர்.