Categories
இந்திய சினிமா சினிமா

அவருக்கு எலும்பு இருக்குதா….? யாரையும் இப்படி பார்த்தது இல்ல…. மகேஷ் பாபு வியந்த பிரபல நடிகை…!!

தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்த திரைப்படம் லவ் ஸ்டோரி இந்த படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப் போடப்பட்ட  இது கடந்த 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இதனை பார்த்த பிரபலங்கள் பலர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவ்வகையில்  தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதில் படம் நன்றாக இருந்ததாகவும் நாக சைதன்யாவின் நடிப்பு மிக அற்புதம் என்றும் மகேஷ் பாபு கூறியுள்ளார். சாய் பல்லவி பற்றி மகேஷ் பாபு கூறுகையில் “சாய்பல்லவி எப்போதும் போன்று அருமை தான். அவருக்கு உண்மையில் எலும்பு இருக்கிறதா? யாரும் இப்படி நடனம் ஆடி நான் பார்த்ததே கிடையாது. கனவு போன்றுதான் இருக்கிறது” என குறிப்பிட்டுள்ளார். இதனைப் பார்த்த சாய்பல்லவி மில்லியன் முறை மகேஷ்பாபுவின் ட்விட்டை படித்துவிட்டதாக கூறி நன்றி தெரிவித்து கமெண்ட் செய்துள்ளார்.

Categories

Tech |