Categories
சினிமா

“அவனை பார்த்தா பளார்னு அறைஞ்சிடுவேன்”….. பயங்கர கோபத்தில் வனிதா…..!!!!

தமிழ் சினிமாவில் விஜயின் சந்திர லேகா படத்தின் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இவர் கடந்த 2000 ஆம்  ஆண்டு நடிகர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்தார். இதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இவர்களுக்கு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், மகளும் உள்ளனர். இதனையடுத்து 2005 ஆம் ஆண்டு வனிதா ஆகாஷை பிரிந்தார். அதன்பிறகு 2007 ஆம் ஆண்டு ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு ஆனந்த ஜெய் ராஜனை விவாகரத்து செய்த வனிதா நடன இயக்குனருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். இறுதியில் கடந்து 2020 ஆம் ஆண்டு பீட்டர் பால் என்பவரை வனிதா திருமணம் செய்தார். ஆனால் அந்த திருமண வாழ்க்கையும் நீடிக்க வில்லை. சில மாதங்களிலே அவரை பிரிந்தார்.

இதனையடுத்து தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சறுக்கல்களை சந்தித்த வனிதா தற்போது சினிமா, சின்னத்திரை, நிகழ்ச்சி, பிசினஸ் என பிசியாக உள்ளார். இந்நிலையில் வனிதா ஆகாஷின் மகனான விஜய் ஸ்ரீ ஹரியிடம் நெட்டிசன் ஒருவர் வனிதவோட பையனா நீங்க என்று கேட்டார். அதற்கு, நான் ஆகாஷோட பையன் ப்ரோ என்று பதில் அளித்தார். அதன் பிறகு ஊடகம் ஒன்று பேட்டி அளித்த வனிதாவிடம் விஜய் ஸ்ரீஹரியின் பதில் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு வனிதா அது உண்மை தானே. அவனுக்கும் எனக்கும் எந்த மனஸ்தாபமும் கிடையாது. நேரில் பார்த்தால் பளார் என்று அறைந்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் ஆள் தான் வளர்ந்து இருக்கிறான். அறிவு வளரவில்லை இரண்டு லூசு தான், அவனுக்குள் விஜயகுமார் ரத்தம் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |