காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளம்பெண்ணை தந்தை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பகுதியில் கூலித் தொழிலாளியான வேலுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜாத்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருக்கின்றனர். இதில் வேல் சாமியின் மகளான சுதா பட்டப்படிப்பு படித்துவிட்டு தனது தாய்க்கு உதவியாக பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த பெற்றோர் சுதாவை கண்டித்து காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக குடும்பத்தினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் வேல்சாமி தனது வீட்டில் இருந்த அரிவாளால் சுதாவை வெட்டியுள்ளார். இதனால் படுகாயமடைந்த சுதாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வேல்சாமி நடந்தவற்றை கூறி பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வேல்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.