பீகாரில் 100 அடி நீள புத்தர் சிலையை அடுத்த ஆண்டு பெங்கால் கலைஞர் போத் கயா நகரில் நிறுவ தயார் செய்து வருகிறார்.
பீகாரின் வரலாறு இந்தியாவில் மிகவும் மாறுபட்ட ஒன்றாகும். இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம் பீகார். அம் மாநிலத்தின் தலைநகர் பாட்னா. பண்டைய காலத்தில் பீகார் கல்வியில் சிறந்து விளங்கியது. ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பீகார் மிகவும் பின்தங்கியுள்ளது. உலகப் புகழ் பெற்ற நாலந்தா பல்கலைக்கழகம் அங்குள்ளது.
ஆனால் சுதந்திரத்திற்குப் பின்பு அரசியல் கட்சிகளால் நாசமாய் போனது. பீகாரை ஆட்சி செய்த அரசியல் கட்சியினர் மக்களை இருட்டில் தள்ளியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பெங்கால் கலைஞர், 100 அடி நீள புத்தர் சிலையை அடுத்த ஆண்டு போத் கயா நகரில் நிறுவ தயார் செய்து வருகிறார்.