Categories
தேசிய செய்திகள்

அவங்கள தப்பவிடக் கூடாது!…. மத்திய ஊழல் தடுப்பு அமைப்புக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்….!!!!

ஊழல் விழிப்புணர்வு வாரத்தையொட்டி சிவிசி ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது, ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு பொறுப்பேற்க வைக்கும் அடிப்படையில் சமுதாயம் செயல்பட வேண்டும். இதற்குரிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். ஊழல்வாதிகள் என்று நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் எழுவதை பார்க்கிறோம்.

இதனிடையில் தங்களை நேர்மையானவர்கள் என அழைத்து கொள்பவர்கள், ஊழல்வாதிகளை சென்றுபார்ப்பதும், அவர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கும் வெட்கப்படுவது கிடையாது. இந்நிலை இந்திய சமுதாயத்திற்கு நல்லதல்ல. ஊழல்வாதிகளுக்கு ஆதரவாக பேசும் சிலபேர், அவர்களுக்கு விருது தரவேண்டும் என்கின்றனர். ஊழல் செய்தவர்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களை தப்பவிடக்கூடாது என மத்திய ஊழல் தடுப்பு அமைப்பு(சிவிசி)க்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்

Categories

Tech |