தற்போது தமிழகத்தில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். அதாவது வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து விடுவதால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்களால் முயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்று அதிமுக கட்சி நிர்வாகிகளுக்கு இபிஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிநீர், பால், உணவுப்பொருள்கள் வழங்க வேண்டும். மக்களுக்கு உழைப்பதில் தன்னலம் கருதாத தியாகச்செம்மல்கள் என்ற வீரவரலாறு நமது பொது வாழ்வுக்கு உண்டு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்து இருக்கிறார்.