கோயம்புத்தூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கன மழை பெய்து வருகிறது இதனால் பொள்ளாச்சி அருகில் உள்ள அழியாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. அதன் பிறகு போதிய மழைப்பொழிவு இல்லாததால் அணையின் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இதனையடுத்து கடந்த சில நாட்களாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பகல் 1 மணிக்கு அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டி கடல் போல் காட்சி அளித்தது. கோடை காலத்தில் வெளியே தெரிந்த பாறைகள் நீரில் மூழ்கியது. இதனால் அழியாறு பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறியது, அழியாறு அணையின் 3,864 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்கலாம். தற்போது அணையின் 2664 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. அதனை முழு கொள்ளளவை எட்டுவதற்கு இன்னும் 1200 மில்லியன் காண அடி நீர் தேவை. நேற்று பகல் 1 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. அணைக்கு அப்பர் அழியாறு மற்றும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து வினாடிக்கு 2,900 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அதனை கண்காணித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.