அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். மேலும் மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். நடிகர் அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் செம வைரலானது.
5 Languages, 5 singers & One Rocking Tune by @ThisIsDSP 🎵
Icon Staar @alluarjun's #PushpaFirstSingle on AUG 13th🔥#HBDRockStarDSP#DaakkoDaakkoMeka #OduOduAadu #OduOduAade #JokkeJokkeMeke #JaagoJaagoBakre#Shivam @benny_dayal @RahulNOfficial @rvijayprakash @VishalDadlani pic.twitter.com/aqzKCrcg62
— Pushpa (@PushpaMovie) August 2, 2021
இந்நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 13-ஆம் தேதி புஷ்பா படத்தின் முதல் பாடல் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த பாடலை தமிழில் பென்னி டயாலும், ஹிந்தியில் விஷால் டாடாலனியும், தெலுங்கில் சிவமும், மலையாளத்தில் ராகுல் நம்பியாரும், கன்னடத்தில் விஜய் பிரகாஷும் பாடியுள்ளனர். இன்று இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலுக்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.