Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’… பட்டைய கிளப்பும் முதல் பாடல் இதோ…!!!

அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரபல நடிகர் பகத் பாசில் வில்லனாக நடிக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவாகி வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

இந்நிலையில் புஷ்பா படத்தின் முதல் பாடலான ‘ஓடு ஓடு ஆடு’ பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த பாடலை தமிழில் பென்னி தயாலும், ஹிந்தியில் விஷால் டாடாலனியும், தெலுங்கில் சிவமும், மலையாளத்தில் ராகுல் நம்பியாரும், கன்னடத்தில் விஜய் பிரகாஷும் பாடியுள்ளனர். இரு பாகங்களாக உருவாகி வரும் புஷ்பா படத்தின் முதல் பாகம் வருகிற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ரிலீஸாகவுள்ளது.

Categories

Tech |