புஷ்பா படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகவுள்ளது
தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் புஷ்பா. இயக்குனர் சுகுமார் இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இந்த படம் இரு பாகங்களாக வெளியாகவுள்ளது.
Raw & Intense Look of @iamRashmika is all set to amaze you!
Meet our #Pushpa's Love tomorrow at 9:45 AM ♥#PushpaTheRise #ThaggedheLe 🤙@alluarjun @aryasukku @ThisIsDSP @adityamusic @MythriOfficial pic.twitter.com/aTh5pJdUGa
— Pushpa (@PushpaMovie) September 28, 2021
மேலும் இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில் பஹத் பாசிலின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் புஷ்பா படத்தின் கதாநாயகி ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (செப்டம்பர் 29) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.