பேருந்து நிலையத்திற்கு அருகே தம்பதியினர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் எப்போதும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இங்கு வந்த கணவன் மனைவி இருவரும் குடும்ப பிரச்சனை காரணமாக தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றனர். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீ காயங்களுடன் கிடந்த கணவன், மனைவி இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.