கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 91 வயதுடைய மூதாட்டி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டதால் வீட்டில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது பொள்ளாச்சி நேதாஜி நகரில் வசிக்கும் மைதீன் என்பவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. உறவினர்களை பார்த்ததும் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மைதீனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த மகளிர் நீதிமன்றம் அத்துமீறி நுழைந்து மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக மைதீனுக்கு 500 ரூபாய் அபராதமும், 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டார்.