Categories
மாநில செய்திகள் வானிலை

அலர்ட்..! 23 மாவட்டங்களில்…. 3 நாட்களுக்கு வெளுக்கப்போகும் கனமழை….. எங்கெல்லாம்?

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்ச்சியின் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள மாவட்டங்களில் கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும்  திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் கனமழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 23 மாவட்டங்களில் மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

26, 27 மற்றும் 28 ஆகிய 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தமிழகத்தில் இயல்பை விட அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது. குறிப்பாக ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை இன்று வரைக்கும் இயல்பை விட 124 சதவீதம் அதிகப்படியான மழை என்பது தமிழகத்தில் பதிவாகி இருக்கக்கூடிய சூழ்நிலையில், தென்மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட ஆரம்பித்துள்ளது இந்த நிலையில் 23 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது கடன் 2 வாரங்களாக தமிழகத்தில் மழை சற்று குறைந்து காணப்பட்டது. நேற்றைய தினம் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கன மழை பொழிந்துள்ளது.

Categories

Tech |