13 நாடுகளை சேர்ந்த 92 பேருக்கு குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
‘மங்கி பாக்ஸ்’ எனப்படும் குரங்கு அம்மை வைரஸ் தொற்று விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோயாகும். இந்த தொற்றானது, ஏற்கனவே பதினொரு நாடுகளில் 80 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது. இந்நிலையில் 11 நாடுகளில் 80 பேருக்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 13 நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.