புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கருங்குடிக்காடு கிராமத்தில் குடி தண்ணீருக்காக சாலையை கடந்து சென்று கிராம மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை இருந்துள்ளது.
மேல்மங்கலம் ஊராட்சியை சேர்ந்த கருங்குடிக்காடு அம்பலகாரர் குடியிருப்பு பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகள் கடந்த 10 மாதங்களாக ஆழ்குழாய் கிணறு பழுதான நிலையில் உள்ளது. அதனால் காசு கொடுத்து குடிதண்ணீர் வாங்கி உபயோகப்படுத்தும் சூழல் இருந்துள்ளது. இந்நிலையில் நமது செய்தியாளர் கருப்பையா அவர்கள் இது குறித்து கல ஆய்வு செய்தபோது இந்த பகுதியில் உள்ள ஊராட்சி செயலாளர் பழனியப்பன் என்பவர் ஊராட்சிக்கு பொறுப்பு கிணறுக்காக 6 ஆண்டுக்கு மேலாக பணியாற்றி வருகிறார். அவரது சொந்த ஊராட்சி அவனத்தாங்கோட்டை எங்கள் பகுதிக்கு கஜா புயல் நேரத்தில் கூட வந்து சிறு உதவி கூட செய்யவில்லை என்று தெரியவந்தது.
மேலும் ஊராட்சி மன்ற தலைவி மஞ்சுளாதேவி இடமும் கூறியும் எந்த பயனும் இல்லை. அந்த கிராமத்திற்கு 8 லட்ச ரூபாய் மதிப்பில் போர்வில் அமைப்பதற்கு அனுமதி இருந்தும். தற்போது வரை செயல்படுத்தாத நிலையே இருந்து வருகிறது. இதனையடுத்து பத்து மாத காலமாக தண்ணீர் இல்லாத நிலையில் தற்போது காவிரி நீரை அந்தப் பகுதிக்கு தற்காலிகமாக கொடுத்து வருகின்றனர். மற்றும் இன்னும் 2, 3 நாட்களில் விரைவில் முழுமையாக குடிதண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைப்போம் என உறுதியளித்து விட்டு சென்றுள்ளனர். இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய செய்தியாளருக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் கிராம மக்கள் தமது நன்றியை தெரிவித்தனர்.
ஊராட்சி பொறுப்புகளுக்காக பயணிக்க கூடியவர்கள் 3 ஆண்டுகள் மட்டுமே பயணிக்க முடியும் என்று அரசு தரப்பில் கூறுகிறார்கள் ஆனால் பழனியப்பன் என்பவரோ 6 ஆண்டுகளுக்கு மேலாக பணி செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இதுவரை மக்களுக்கு தேவையான எந்த அடிப்படை வசதியும் செய்து தராமல் அலைக்கழித்து வருகிறார். எனவே இந்த பத்து மாத காலம் தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டதிற்கும் ஊராட்சி செயலாளர் பழனியப்பன் தான் காரணம் ஆகையால் அவரை மாற்றி எங்களுக்கு வேறு ஒரு ஊராட்சியில் இருந்து நல்ல ஒரு கிளார்க்கை பணி செய்ய அனுப்ப வேண்டும் என கிராம மக்கள் இந்நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய கோரிக்கையாக வைக்கின்றனர்.