Categories
சினிமா தமிழ் சினிமா

“அற்புதமான நடிகர்” அவர் நடிப்பை எட்டுவது ரொம்ப கடினம்…. விஜய் சேதுபதியை பாராட்டி தள்ளிய பாலிவுட் பிரபலம்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களாக வலம் வரும் புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாதவன், வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஸ்ரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமைக்கை புஷ்கர்-காயத்ரி இயக்கியுள்ளனர். இந்த படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் சைப்காலிகான் ஆகியோர் ஹீரோவாக நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் விக்ரம் வேதா ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் விக்ரம் வேதா படம் குறித்து பிரமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் ஹிருத்திக் ரோஷன் மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, விக்ரம் வேதா திரைப்படத்தில் விஜய் சேதுபதி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அவருடைய நடிப்பை எட்டுவது என்னால் கனவில் கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. என்னால் முடிந்ததை நான் செய்துள்ளேன். இதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். பொதுவாக ஒரு கதாபாத்திரத்தை நீங்கள் அணுகும் போது அந்த கதாபாத்திரத்தில் நடிப்பவர்கள் செய்ததை மீண்டும் செய்வது கடினமான ஒன்று. ஒவ்வொருவரும் வித்தியாசமானவர் என்பதை அறிந்து கொள்வது தான் எளிய வழி. நான் பார்த்த விதத்தில் என்னுடைய கதாபாத்திரத்தை செய்துள்ளேன். அது வித்தியாசமாகவும், எளிமையாகவும், நேர்மையாகவும் வந்திருக்கிறது என்றார்.

Categories

Tech |