தந்தையின் சிறுகுடலை வெட்டி மகனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சிறு குடல் மாற்று அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.
பெங்களூருவை சேர்ந்தவர்கள் சுவாமிநாதன் சாவித்திரி தம்பதியினர். இவர்களுக்கு 4 வயதில் குகன் என்ற மகன் உள்ளார். இந்தச் சிறுவனுக்கு சிறுகுடல் முறுக்கம் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இந்த சிறுவன் சென்னையில் உள்ள ரெலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு சிறுகுடல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தந்தையின் சிறுகுடலின் ஒரு பகுதியை வெட்டி எடுத்து அந்த சிறுவனுக்கு பொருத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு அந்த சிறுவனின் தந்தை சம்மதம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுவனின் தந்தையின்னுடைய சிறுகுடலின் 150 சென்டிமீட்டர் நீளமுள்ள சிறுகுடல் பகுதியினை பகுதியினை வெட்டி எடுத்து அதனை சிறுவனுக்கு பொருத்தியுள்ளனர். சுமார் 7 மணி நேரம் நடைபெற்ற இந்த அறுவை சிகிச்சை வெற்றி அடைந்து விட்டது. தற்போது சிறுவன் மற்றும் அவனது தந்தை இருவரும் நலமாக உள்ளனர் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.