Categories
அரசியல்

அறிவாலயத்தில் நெருக்கடி… சட்டம் தந்தது சவுக்கடி…. அண்ணாமலை அதிரடி!!!!

யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆணையிட்டுள்ளது. இதற்கு முன்னதாக, மாரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்பை தமிழக பாஜக பதிவுசெய்து வந்தது. இந்தநிலையில், மாரிதாஸ் வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வரவேற்பை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாரிதாஸிற்கு அறிவாலயத்தின் எதிர்கால நெறுக்கடி, அறிவாலயத்திற்கு சட்டம் தந்தது சவுக்கடி, வாய்மையே வெல்லும்.

இது தமிழக அரசின் முத்திரை வாசகம். மேலும் தமிழக அரசு உண்மையில் இருந்து தவறி பொய்மை பாதையில் போய்க் கொண்டிருப்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. அறிவாலய திமுக அரசு தலைகுனிய உண்மை மீண்டும் வென்று இருக்கிறது. சாமானிய மக்களின் சத்தியத்தின் மீதான நம்பிக்கைக்கு கடைசிப் புகலிடமாக இருந்து கொண்டிருப்பது நீதிமன்றம் மட்டும்தான். மேலும் மாரிதாசை காவல்துறையினர் கைது செய்தபோது 50-க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதாகட்சி தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பினை அரசுக்கு அமைதியாக தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் மீது காவல்துறை வழக்கு தொடுத்துள்ளது. இந்தநிலையில், சட்டத்துக்கு புறம்பாக தன்மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று மாரிதாஸ் அவர்களும் நீதிமன்றத்தின் கதவினை தட்டி இருந்தார். அந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி சுப்பிரமணிய சுவாமியும் இதுபோன்று கேள்வியை எழுப்பி இருந்தாரே, அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டதா ஜெயலலிதா மரணத்தின் போது இது போன்ற சந்தேகங்கள் எழுப்பப்பட்டன என்று கேட்டிருந்தார்.

அனைத்து தரப்பையும் கேட்ட நீதிபதி, மாரிதாஸ் மீது கொடுக்கப்பட்ட சட்டப்பிரிவுகள் 153A (ஜாதி மத இடங்களுக்குள் முரண்பாடு ஏற்படுத்தும் வகையில் பேச்சாலும், எழுத்தாலும், செய்கையாளும் தூண்டி விடுதல்) மற்றும் 504 (தனது கருத்தால் அல்லது பதிவால் சமூகத்தில் பிரச்சனை ஏற்படும் என தெரிந்தே பதிவிடுதல்) 505(||) (ஜாதி, மத, இன வேறுபாடு ஏற்படுத்தி பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் தூண்டிவிடுதல்) 505(|) [b] (பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின்கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது செல்லாது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார். எனவே, மாண்புமிகு நீதிபதி அவர்கள் காவல்துறை பயன்படுத்திய சட்டப்பிரிவுகள்

செல்லாது என்று கண்டித்தது. காவல்துறையின் அவசர கோலத்தில் செயல்பாட்டை அடையாளப்படுத்தி விட்டது. மேலும் ஒருதலைப்பட்சமாக சட்டத்தை பயன்படுத்தி எதிர்ப்பாளர்களை அச்சுறுத்த முயற்சி செய்யவும் அறிவாலயத்தில் நடவடிக்கைகளுக்கு இந்த தீர்ப்பு சட்டம் தந்த சவுக்கடி என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |