Categories
மாநில செய்திகள்

அறநிலையத்துறையில் உருவாகும் புதிய காலிப்பணியிடங்கள்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் 40 செயல் அலுவலர் பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை கூறியுள்ளது. இதுகுறித்து அறநிலையத் துறை செயலாளர் சந்திரமோகன் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது, இந்து சமய அறநிலையத்துறையில் புதிதாக 34 செயல் அலுவலர் நிலை-1 பணியிடங்கள் மற்றும் 6 செயல் அலுவலர் நிலை-2 பணியிடங்கள் என மொத்தம் 40 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ரூபாய் 3.62 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதன்படி பெரியபாளையம் பவானியம்மன், சென்னை, நங்கநல்லூர் ஆஞ்சநேயர், சிறுவாபுரி, பாலசுப்ரமணியசுவாமி கோயில், சென்னை சந்தான சீனிவாச பெருமாள் கோயில், அரும்பாக்கம் பிடாரி உத்தனாட்சியம்மன் கோயில், பாடி திருவல்லீஸ்வரர் கோயில், சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வர சுவாமி கோயில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில், திருவிடந்தை வெங்கடேச பெருமாள் கோயில், பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜபெருமாள் கோயில் போன்ற 34 கோயில்கள் செயல் அலுவலர் நிலை-1 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதேபோல்பாடி கைலாசநாதர் கோயில், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோயில், வியாசர்பாடி ரவீஸ்வரர் கோயில் உட்பட 6 கோயில்கள் செயல் அலுவலர் நிலை-2 பணியிடங்களும் உருவாக்கப்பட உள்ளன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |