கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.50 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிக அளவில் இருக்கின்றனர். ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பாகவே கேரள ரசிகர்கள் ஆழ்கடலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸிக்கு கட்-அவுட் வைப்பது போன்ற கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கத்தாரின் லுசைல் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தி அர்ஜென்டினா இரண்டாவது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இந்த இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றதை கேரள ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ.50 கோடிக்கு மதுபானம் விற்பனை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஓணம், விஷு உள்ளிட்ட பண்டிகை நாட்கள் விற்பனையாகும் அதே அளவில் ஃபிஃபா கால்பந்து இறுதிப் போட்டி நாளில் மது விற்பனை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.