அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் பெயருடன் போஸ்டர் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அர்ஜூன். இவர் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு கதாபாத்திரத்திலும் நடித்து தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். நடிகர் அர்ஜுனுடன் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதை மற்றும் சிறந்த வித்தியாசமான கதை உள்ளிட்டவற்றை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கிறார்.
இவர்கள் நடிக்கும் இத்திரைப்படத்திற்கு “தீயவர் குலைகள் நடுங்க” என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படம் ஆக்ஷன் மற்றும் க்ரைம் த்ரில்லர் மூவியாக உருவாகி வருகின்றது. இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருக்கின்றது. இந்த போஸ்டர் இணையதளத்தில் அனைவரின் கவனத்தையும் பெற்று வருகின்றது. இப்படத்தை தினேஷ் லட்சுமணன் இயக்குகின்றார். ஜி.அருள்குமார் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்ட பணியில் உள்ளது. மேலும் இப்படத்திற்கு ஆசிவகன் இசையமைத்துள்ளார்.