Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அரையிறுதியில் வெளியேறிய இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு பரிசுத்தொகை எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது..

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் 2ஆவது அரையிறுதியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜோஸ் பட்லரின் இங்கிலாந்திடம் படுதோல்வியடைந்து மெகா நிகழ்விலிருந்து வெளியேறியது.  ஒரு விக்கெட் கூட எடுக்காமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது குறித்து ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.. இதற்கிடையே இந்திய அணி தோல்வி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்தியாவை வென்ற இங்கிலாந்து அணி நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது..

இந்நிலையில் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்து வெளியேறிய இந்திய அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை கிடைத்துள்ளது என்பதை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐசிசி ஏற்கனவே அறிவித்ததன் படி சாம்பியன் பட்டம் பெரும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் அதன் மதிப்பீடு 13,04,90,640) வழங்கப்படும். 2ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர்  (இந்திய மதிப்பு 6,44,38,520.00) கொடுக்கப்படுகிறது.

அதே சமயம் அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு  தலா 4 லட்சம் அமெரிக்க டாலர் (3,22,19,260.00) வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இந்திய ரூபாய் மதிப்பில் 3.22 கோடி ரூபாய் பரிசு தொகையாக கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |