Categories
கிரிக்கெட் விளையாட்டு

அரைசதம் அடித்து அசத்திய பட்லர்….. 218 ரன்கள் இலக்கை நிர்ணயித்த ராஜஸ்தான்….!!!

இன்று நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதலாவது போட்டியில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இரண்டு அணிகளும் கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்ததால், இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் விளையாடி வருகின்றனர்.

டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கி உள்ளது.  தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஏற்கனவே இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முன்னணி வகிக்கும் பட்லர் இந்த போட்டியிலும் வந்த வேகத்தில் பவுண்டரிகளாக விளாசினார். அதிரடியாக விளையாடிய அவர் 29 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். தற்போது வரை ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்கள் எடுத்துள்ளது.

Categories

Tech |